From jaybee555@jM8av1Iz5HqHAYgKmUKHs-SlHGyxEdVMDg5Qb6 pFK uQ26jDylhSvgY7tFxQJGOFcvR4Oltw8dzxYyPYYc.yahoo.invalid Tue Jul 17 17:03:25 2007
Return-Path: X-Sender: jaybee555@jM8av1Iz5HqHAYgKmUKHs-SlHGyxEdVMDg5Qb6 pFK uQ26jDylhSvgY7tFxQJGOFcvR4Oltw8dzxYyPYYc.yahoo.invalid
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 25381 invoked from network); 18 Jul 2007 00:02:52 -0000
Received: from unknown (66.218.66.68) by m49.grp.scd.yahoo.com with QMQP; 18 Jul 2007 00:02:52 -0000
Received: from unknown (HELO n24.bullet.scd.yahoo.com) (66.94.237.53) by mta11.grp.scd.yahoo.com with SMTP; 18 Jul 2007 00:02:49 -0000
Received: from [209.73.164.86] by n24.bullet.scd.yahoo.com with NNFMP; 18 Jul 2007 00:02:45 -0000
Received: from [66.218.67.201] by t8.bullet.scd.yahoo.com with NNFMP; 18 Jul 2007 00:02:45 -0000
Date: Wed, 18 Jul 2007 00:02:43 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="ISO-8859-1"
Content-Transfer-Encoding: base64
X-Mailer: Yahoo Groups Message Poster
X-Yahoo-Newman-Property: groups-compose
X-Originating-IP: 66.94.237.53
X-eGroups-Msg-Info: 1:6:0:0
X-Yahoo-Post-IP: 219.94.63.187
From: "jaybee555" Subject: Bakawali - With Picture- Re: [agathiyar] Kulebagawali
X-Yahoo-Group-Post: member; u=26960409; y=1auzyxGXCusWMu4coIXokvWKHN6LvXh2ybnoFPZztBq CC3k
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 42881
அன்பர்களே,
அகத்தியம் தற்சமயம் திஸ்க்கியில் இயங்கிக்கொண்டிருப்பதால்
திஸ்க்கியிலேயே மடல்களை அனுப்புக்கோருகிறோம்.
'குலேபகாவலி' என்பதில் இரு மலர்களின் பெயர்கள்
அடங்கியுள்ளன.
குலேபகாவலி என்னும் கதை பாரசீக மொழியில் எழுதப்பட்ட
கதை.
தமிழில் ஒரு பெரிய கதை இலக்கியம் ஒரு காலத்தில் இருந்தது.
பல மாதிரியான கதைகள் அதில் இருந்தன. மயில்ராவணன் கதை,
ஆரவல்லி சூரவல்லி கதை, அல்லிஅரசாணிமாலை, பவளக்கொடி
கதை, அரிச்சந்திரன் கதை, மரியாதை ராமன் கதை,
விக்கிரமாதித்தன் கதை, தூக்குத்தூக்கி, ரம்பை கலியாணம்,
என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
இவற்றில் சில கதைகள் பெரிய எழுத்துப் புத்தகங்களாகப்
போடப்பட்டன.
வேறு சில, தெருக்கூத்துக்களில் இடம் பெற்றன.
இந்தக் கதை இலக்கியத்தில் வெளிநாட்டுக் கதைகளும்
இடம் பெற்றன.
அவற்றில் ஒன்றுதான் 'குலேப் பகாவலி'.
'பகாவலி' என்பது ஒரு மலர் என்பது எனக்கு முப்பது
ஆண்டுகளுக்கு முன்னர்தான் தெரியும்.
நான் அப்போது குவாலா ப்ராங் என்னும் ஊரில் இருந்தேன்.
நடுக்காடு; சுற்றிலும் மலைகள்; பெரும் ஆறுகள். புலி, யானை,
காண்டாமிருகம் உலவும் இடம்.
அங்கு மஜீத் என்னும் பெரியவர் வாழ்ந்துவந்தார்.
திருமலைராயன் பட்டினத்துக்காரர். அகத்தியத்தில் பல முறை
அவரைக் குறிப்பிட்டிருக்கிறேன்.
"பக்காவலீ'ன்றது ஒர்ரு பூவு. அஃத சாதார்ரணமாப்
பாத்துக்க முடியாது. இங்க, இந்த கோலப்ரான் காட்டுல அஃது
இர்ருக்கு. அஃது ரொம்ப அழகாய பூவுங்க. அஃதப் பாத்து
கிர்ர்ருக்குக்கூடப் புடிச்சுப்போயிர்ரும்.
இந்த வனாந்த்ர்ரத்துல மோஹினிஹ உலவுவாளுஹ. அவளுஹ
வர்ரப்ப இந்த வாசம்தான் அடிக்கும். ரொம்பத் தூக்கலா அடிக்கும்.
இஃது அடிக்குதுன்னாக்க அவளுஹ அருகாமயில இர்ருக்காளுஹ.
அப்பிடியே கூடவே போயிப்பிடுவானுஹ."
அவர் 'ர்' 'க்' போன்றவற்றை அழுத்தமாக உச்சரிப்பார்.
மலாய் மொழியில் இதை 'பாக்காவாலி' என்று அழைப்பார்கள்.
நான் அறிந்த மலர் ஒரு மாதிரியான செந்தாமரைக் கலரில்
இருந்தது.
அதை வர்ணிக்க இயலவில்லை.
பகாவலியைக் காண்பதற்கு இதோ ஒரு யூஆர் எல்: